Archive for October 2007

விரைவில் தேர்தல்: விஜயகாந்த்

Wednesday, October 31st, 2007

விரைவில் தேர்தல் வரவிருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சூசகமாக தெரிவித்திருக்கிறார். இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மக்களை சந்திக்க இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
விரிவு…

காஞ்சியில் விஜயகாந்த் வழிபாடு

Friday, October 26th, 2007

காஞ்சிபுரம் அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலில் நேற்றிரவு நடந்த பவுர்ணமி பூஜையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
விரிவு…

திரும்பி வந்த கேப்டன்-தேமுதிகவினரால் திணறிய ஏர்போர்ட்

Wednesday, October 24th, 2007

அரசாங்கம் படப்பிடிப்புக்காக கனடா சென்று திரும்பிய நடிகரும், தேமுதகி தலைவருமான விஜயகாந்த்தை வரவேற்க அவரது கட்சித் தொண்டர்கள் பெருமளவில் விமான நிலையத்தில் குவிந்து விட்டதால் விமான நிலையமே திமிலோகப்பட்டுப் போனது.
விரிவு…

அரசு மீது விஜயகாந்த் தாக்கு

Monday, October 22nd, 2007

தமிழக அரசின் மெத்தனப் போக்கால் கோவை உக்கடம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து, 13 பேர் உயிரிழக்க காரணமானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். பராமரிப்பு பணியிலும், மக்கள் மீதும் அரசு அக்கறை காட்டுவதில்லை என்பதையே இது உணர்த்துவதாக அவர் கூறியுள்ளார்.
விரிவு…

விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பு

Monday, October 22nd, 2007

கனடாவில் படப்பிடிப்பு முடிந்து இன்று சென்னை திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, அவரது கட்சியின் தொண்டர்கள் விமான நிலையத்தில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது அரசாங்கம் என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண் டிருக்கிறார்.
விரிவு…

ஜெ. மீதான உரிமை மீறல் பிரச்சினை தவறு-விஜயகாந்த்

Friday, October 19th, 2007

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது அமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சினையில் சபாநாயகர் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

நகத்தால் கிள்ள வேண்டிய பிரச்சனையை கோடாரியால் வெட்டுவதா?: விஜய்காந்த்

Thursday, October 18th, 2007

மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விரிவு…

விஜயகாந்த் வலியுறுத்தல்

Thursday, October 18th, 2007

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
விரிவு…

பஸ் தொழிலாளர்களுக்கு முழு போனஸ்-விஜயகாந்த்

Wednesday, October 17th, 2007

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸை பிரித்து கொடுக்காமல் முழுமையாக கொடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

விஜயகாந்த் வலியுறுத்தல்

Wednesday, October 17th, 2007

தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகையாக 8,400 ரூபாயை மொத்தமாக வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியிருக்கிறார். ஏற்கனவே இருந்தபடி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
விரிவு…