காந்தி சிலை:தேமுதிகவினர் மாலை
காஞ்சிபுரம் 37வது வார்டில் தேமுதிக சார்பில் நடந்த காந்தி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் நகர செயலாளர் சி.ஏகாம்பரம் தலைமை வகித்தார்.
திருவள்ளுவர் தெருவில் உள்ள காந்தி சிலைக்கு தேமுதிகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர பொருளாளர் மணிவண்ணன், நிர்வாகிகள் வெங்கடேசன், சீனிவாசன், பூபாலன், அருண், கோதாவரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.