காஞ்சி: தேமுதிக கொடி நாள் விழா
காஞ்சி நகர 10வது வட்டம் தேமுதிக கட்சியின் கொடி அறிமுக விழா, கல்வெட்டு திறப்பு விழா குறித்து தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. பூக்கடை சத்திரம் தெருவில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு நகர செயலாளர் சி.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் சி.எஸ்.ஏழுமலை முன்னிலை வகித்தார். மாவட்ட பிரதிநிதி எஸ்.ரவி ஆச்சாரி வரவேற்புரை ஆற்றினார்.
கொடியேற்றி விழாவை வடக்கு மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் துவக்கி வைத்தார். மாவட்ட அவைத் தலைவர் கே.சி.சந்திரசேகன் கல்வெட்டு திறப்பு விழாவை திறந்து வைத்தார்.
மாவட்ட பொருளாளர் ஆர்.பூபதி இனிப்பு வழங்கினார். தலைமை கழக பேச்சாளர்கள் தம்பி முருகேசன், திருநீர்மலை பரமசிவம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.எஸ்.முருகேசன் வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட சங்கத் தலைவர் ரவிசங்கர், மாவட்ட வழக்கறிஞர் துணை செயலாளர் எஸ்.பெர்ரின், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் இ.எஸ்.குமார், நகர அவைத் தலைவர் வி.எஸ்.சுப்பராயன், நகர பொருளாளர் எஸ்.மணிகண்டன், செயல்வீரர் ஏ.ரவி, ஒன்றியச் செயலாளர் ஆர்.தினகரன், துணை செயலாளர் வடிவழகன், நகர மகளிரணி ராணிவேல் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். 10வது வட்ட செயலாளர் கே.நாகராஜன் நன்றியுரை வழங்கினார்.