தே.மு.தி.க கோரிக்கை
சுல்தான்பேட்டை ஒன்றிய தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் செஞ்சேரிபிரிவில் நடந்தது. ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி செயலாளர் சுப்பிரமணியம் வரவேற்றார். கூட்டத்தில் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தவேண்டும், ஒன்றிய பகுதிகளில் கிளை பொறுப்பாளர்கள் நியமித்து பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க பாடுபடவேண்டும். ஒன்றியத்தில் உள்ள கறவைமாடுகளை வாய்சப்பை நோய் பாதிப்பில் இருந்து காக்க நடமாடும் கால்நடை மருத்துவ குழுவை நியமிக்க கால்நடை பராமரிப்புத்துறையினரை கேட்டுக்கொள்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.