தேமுதிக சார்பில் விழா

காஞ்சி ஒன்றிய தேமுதிக சார்பில் அம்பேத்கர் பிறந்த தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
.
காஞ்சிபுரத்தையடுத்த ஓரிக்கை கிராமத்தில் நடைபெற்ற விழாவில் தேமுதிக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.முருகேசன் தலைமையில் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தொடர்ந்து ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய பேரவை செயலாளர் செவிலிமேடு குமார், பேரவை துணைச் செயலாளர் காஞ்சி குமார், நிர்வாகிகள் சரவணன், வேலு, முரளி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை அணிவித்தனர்.

கட்சித் தொண்டர்களுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு விழா இனிதே நடைபெற்றது.

Leave a Reply