தேமுதிகவினர்க்கு அட்டை
திருவள்ளூர் மாவட்ட தேமுதிக சார்பில் 68 ஆயிரம் புதிய உறுப்பினர் களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட தேமுதிக சார்பில் புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் விழா மணவாள நகரில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட செயலாளர் அருண் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வி.நேதாஜி, பொருளாளர் என்.கே.சாமி வரவேற்றார்கள்.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் ஒன்றியம், நகரம், பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, ஆவடி, கடம்பத்தூர், பூண்டி, திருநின்றவூர், திருவாலங்காடு பகுதிகளைச் சேர்ந்த 68 ஆயிரம் பேருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
பிளஸ் 2 மாணவர்களுக்காக கல்வி உலகில் பல்வேறு வாய்ப்புகள் என்ற புத்தகம் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1லட்சத்து 68 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்த்து அடுத்த மாதம் பெரிய விழாவாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மனேஷ்பாபு சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். முடிவில் நகர செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.