Archive for June 2009

இரண்டாவது நாளாக விஜயகாந்த் குறை கேட்பு

Tuesday, June 30th, 2009

விருத்தாசலம்:விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் எம்.எல்.ஏ., இரண்டாவது நாளாக கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வான தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த இரண்டு நாட்களாக தொகுதியில் கிராமம், கிராமமாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். நேற்று முன்தினம் கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பகுதிகளிலும், நேற்று விருத்தாசலம் ஒன்றியம் எறுமனூர், தொட்டிக்குப்பம், ராசாபாளையம், பட்டி, பரூர், கோணாங்குப்பம் உள்ளிட்ட 14 கிராமங்களிலும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, மனுக்களைப் பெற்றார்.
விரிவு…

கூட்டணி பற்றி பேச வரட்டும்: விஜயகாந்த்

Monday, June 29th, 2009

தஞ்சாவூர்: “தேர்தல் கூட்டணிக்காக நாம் யாரிடமும் சென்று பேச முடியாது; கூட்டணி என்று நம்மிடம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று தஞ்சையில் நடந்த ரகசிய கூட்டத்தில் விஜயகாந்த், தொண்டர்களை உற்சாகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.தஞ்சை வடக்கு மற்றும் தெற்கு, திருவாரூர், நாகை ஒன்று, நாகை இரண்டு, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட் டை, கடலூர் உட்பட 16 மாவட்ட தே.மு.தி.க., மகளிரணி மற்றும் நிர்வாகிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம், தஞ்சாவூர் சோழா திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் இதில் பங்கேற்றனர்.நிர்வாகிகள் தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்க வில்லை. இக்கூட்டத்தில், தலைவர் விஜயகாந்த் தனது தொண் டர்களை மிகவும் உற்சாகப்படுத்திப் பேசினார். கூட்டத்துக் குப் பின் நிர்வாகிகளுடன் இணைந்து நூற்றுக்கணக்கான போட்டோவுக்கு விஜயகாந்தும், அவரது மனைவியும் போஸ் கொடுத்து உற்சாகப்படுத்தினர்.

விஜயகாந்த் பேச்சு குறித்து, நிர்வாகிகளிடம் விசாரித்த போது கிடைத்த தகவல்கள்:நாம் சட்டசபை, லோக்சபா தேர்தலை சந்தித்து விட்டோம். இந்த லோக்சபா தேர்தலில், நாம் எதிர்பார்த்த ஓட்டுகளையும், வெற்றியையும் பெற முடியவில்லை. நமது ஓட்டு வங்கியை அதிகரிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும். குறிப்பாக, கிராமங்கள், நகரங்களில் கட்சிக்கு அடித்தளமிட்டு வளர்க்க வேண்டும்.தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளது. அதிக பட்சமாக அடுத்த ஆண்டு வரலாம். கூட்டணிக்காக நாம் யாரிடமும் பேச முடியாது; நாம் முயற்சி செய்ய வேண்டும்.

தேர்தல் வரும் போது, கூட்டணி என்று நம்மிடம் வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாம். சட்டசபை தேர்தலுக்காக நம்மை நாம் இப்போதே தயார்படுத்த வேண்டும். எதற்கெடுத்தாலும் நமது நிர்வாகிகளை குறை சொல்வதை விட்டு விட்டு, அனைவரும் ஒன் றிணைந்து மக்களிடம் சென்று கட்சியை வளர்க்க உழைக்க வேண்டும். அப்போது தான், சட்டசபை தேர்தலை நாம் எதிர்கொள்வது எளிதாகும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

16 மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுடன் மனைவியுடன் விஜயகாந்த் ஆலோசனை

Sunday, June 28th, 2009

தஞ்சாவூர் : தஞ்சாவூர் , திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் உட்பட 16 மாவட்ட தே.மு.தி.க., மகளிரணி மற்றும் நிர்வாகிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் சோழா திருமண மண்டபத்தில் நடந்தது.
விரிவு…

குடும்ப பணி 70 சதவீதம்; கட்சிப்பணி 30 சதவீதம்: மகளிர் அணியினருக்கு விஜயகாந்த் ‘அட்வைஸ்’

Thursday, June 25th, 2009

சென்னை: “”மகளிர் அணியினர் குடும்பத்தினருக்காக 70 சதவீத நேரத்தையும், கட்சி பணிக்காக 30 சதவீத நேரத் தையும் செலவிடவேண்டும்” என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
விரிவு…

தடுத்து நிறுத்தப்பட்ட நிவாரணப் பொருள் கப்பல் * தமிழக அரசிற்கு விஜயகாந்த் வேண்டுகோள்

Friday, June 19th, 2009

சென்னை: “ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைத் தமிழர்களுக்காக நிவாரணப் பொருட்களை ஏற்றிவந்த கப்பலை இலங்கை அரசு தடுத்து நிறுத்தியுள்ளது. அந்த கப்பலை இந்திய துறைமுகத்தில் அனுமதித்து, நிவாரணப் பொருட்களைப் பெற்று, செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு வினியோகிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விரிவு…

நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு தேவை : கட்டணத்தை உயர்த்தாதீர்கள் என்கிறார் விஜயகாந்த்

Thursday, June 18th, 2009

சென்னை: “நெய்வேலியில் உற் பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கே தரப்பட வேண்டும். இல்லையென்றால், நெய்வேலி அனல் மின் உற்பத்தி நிலையங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்,” என சட்டசபையில் விஜயகாந்த் பேசினார்.
விரிவு…

சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க விஜயகாந்த் முடிவு

Tuesday, June 16th, 2009

சென்னை : சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வரும் 17ம் தேதி மொரீஷியசில் இருந்து சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார். கடந்த 9ம்தேதி குடும்பத்துடன் மொரீஷியஸ் தீவிற்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஓய்விற்காக சென்றார். ஒரு வாரம் ஓய்வை முடித்துக்கொண்டு விஜயகாந்த் வரும் 17ம் தேதி அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். அன்று நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

நீங்கள் தான் அடுத்த உள்ளாட்சி பிரதிநிதி: கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் ஊக்கம்

Tuesday, June 2nd, 2009

சென்னை: “”தேர்தல் தோல்வியை நினைத்து சோர்வடைய வேண்டாம்; நீங்கள் தான் அடுத்த உள்ளாட்சி பிரதிநிதிகள் என நினைத்து, அடுத்த கட்ட வேலைகளைத் துவக்குங்கள்,” என தே.மு.தி.க., ஒன்றிய, நகரச் செயலர்களை, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உற்சாகப்படுத்தி அனுப்பினார்.
விரிவு…