லஞ்​சமே விபத்​து​க​ளுக்கு கார​ணம்: விஜ​ய​காந்த்

சென்னை: லஞ்​சம் வாங்​கிக் கொண்டு போக்​கு​வ​ரத்து விதி​மு​றைகளை அமல்படுத்தாமல், கண்​டு​கொள்​ளா​மல் இருப்​ப​து​தான் விபத்​து​க​ளுக்கு கார​ணம் என்று தேமு​திக தலை​வர் விஜ​ய​காந்த் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார்.

அவர் வெளி​யிட்டுள்ள அறிக்கையில்,​

சற்றும் எதிர்பாராத வகையில் திடுக்கிடும் இரண்டு செய்திகள் நம்மை அதிரவைத்துள்ளன.

வே ​தா​ரண்​யம் அரு​கில் 25 பள்​ளிக் குழந்​தை​க​ளோடு 2 ஆசி​ரி​யர்​களை ஏற்​றிச் சென்ற வேன் குளத்​தில் கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளா​னது. அதில் ஒரு ஆசி​ரி​யை​யும்,​ 9 குழந்​தை​களு​ம்
இறந்​துள்​ள​னர். 11 குழந்​தை​கள் படு​கா​யங்​க​ளு​டன் மருத்​து​வ​ம​னை​யில்
அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ள​னர்.

அ ​து​போல,​ ஆத்​தூ​ருக்கு அரு​கில் 40 பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​றிச் சென்ற வேன் மரத்​தில் மோதி கவிழ்ந்​த​தில் 20 பேர் படு​கா​யம் அடைந்​துள்​ள​னர். அதில் டிரை​வ​ரும்,​ 4 குழந்​தை​க​ளும்
கவ​லைக்​கி​டமா​ன நிலை​யில் உள்​ள​னர் என்று தெரி​கி​றது.

அ ​ரசு நிர்​வா​கங்​க​ளில் எங்​கும் லஞ்​ச​மும்,​ ஊழ​லும் தாண்​ட​வ​மா​டு​வதே இதற்​கெல்​லாம் கார​ணம். சாலை போடும் ஒப்​பந்​த​தா​ர​ரி​டம் லஞ்​சம் வாங்​கு​வது,​ லஞ்​சம் வாங்​கிக் கொண்டு வாகன உரி​மம் ஓட்​டு​நர் உரி​மம் வழங்​கு​வது தான் விபத்​து​க​ளுக்கு கார​ணம்.

ஓட் ​டு​நர் உரி​மம் இல்​லா​மல் வாக​னங்​கள் ஓட்​டு​வது,​ அதிக வேகம் மற்​றும் அள​வுக்கு அதி​க​மாக வேன்​க​ளில் பள்​ளிக் குழந்​தை​களை ஏற்​று​வது ஆகி​ய​வற்றை லஞ்​சம் பெற்​றுக் கொண்டு கண்​டு​கொள்​ளா​மல் விடு​வ​து​தான் இது​போன்ற விபத்​து​க​ளுக்கு கார​ண​மாக அமை​கி​றது.

போக்​கு​வ​ரத்​துத் துறை​யின் நிர்​வா​கச் சீர்​கேட்​டுக்கு நாம் தரும் விலையே இந்த குழந்​தை​க​ளின் மர​ணங்​கள்.

குழந்தைகளை இழந்து துயருறும் பெற்றோர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்காந்த்.

Leave a Reply