ஏன் இந்த தேர்தல் வந்தது – விஜயகாந்த் கேள்வி
திருச்செந்தூர் தொகுதியில் தே.மு.தி.க.,வேட்பாளர் கோமதி கணேசனை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அப்போது, “இந்த இடைத்தேர்தல் தற்போது அவசியம்தானா. ஏன் இந்த தேர்தல் வந்தது” என்று கேட்டார்.
பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது:
இந்த இடைத்தேர்தல் தற்போது அவசியம்தானா. ஏன் இந்த தேர்தல் வந்தது. ரோடு சரியில்லை, குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை, சுகாதார வசதிகள் செய்துதரப்படவில்லை என்று கூறி அவர் ராஜினாமா செய்தாரா அல்லது தமது சொத்துக்களை பாதுகாத்துக்கொள்வதற்காக ராஜினாமா செய்தாரா என்பதை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
ஆளுங்கட்சிக்கு உங்கள் எதிர்ப்பை காட்டவேண்டும். அப்போதுதான் ஆளுங்கட்சிக்கு பயம் வரும். இந்த தேர்தலால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்றாலும் மாற்றத்திற்கு வழி வகுக்கும் என்று அவர் கூறினார்.