ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறை‌ப்பே‌ன்: விஜயகாந்த்

‘ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைத்துக்காட்டுவேன்” என்று தே.மு.‌தி.க. தலைவ‌ர் விஜயகாந்த் கூறினார்.

திருச்செந்தூர் தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போ‌ட்டி‌யிடு‌ம் வேட்பாள‌ர் கோமதி ஆ.கணேசனுக்கு தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்ட‌ம் அடை‌க்கலாபுர‌த்‌தி‌ல் அ‌க்க‌ட்‌சி தலைவ‌‌ர் ‌விஜயகா‌ந்‌த் ஆதரவு திரட்டினா‌ர்.

அ‌ப்போது அவ‌ர் பேசுகை‌யி‌ல், தற்போது தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். தே.மு.தி.க. போட்டியிடுவதால்தான் இந்த பணம் உங்களுக்கு வருகிறது. விலைவாசி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைத்துக்காட்டுவேன். நான் சவால் விடுகிறேன். ஒருமுறை தே.மு.தி.க.வை வெற்றி பெற செய்யுங்கள். போட்டியிடும் கட்சிகளில் எங்கள் கட்சிதான் பெரிய கட்சி. மற்றவர்கள்தான் கூட்டணி பலத்துடன் களத்தில் உள்ளனர்.

நாங்கள் மக்களுடன் மட்டும் கூட்டணி வைத்து உள்ளோம். மத்திய அரசு நாற்கர சாலைபோட்டோம் என்கிறார்கள். அதிலும் ஊழல் நடந்துள்ளது. நாசரேத் நூற்பாலைக்கு ஒரு எந்திரம் வாங்கியபோது, காமராஜருக்கு கமிஷன் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் காமராஜர் அதை வாங்க மறுத்தார். அதற்கு பதில் மேலும் ஒரு எந்திரத்தை கொடுங்கள் என்று கேட்டு 2 எந்திரங்களை நாசரேத்தில் நிறுவினார்.

ஆனால் தற்போது ஊழல் மலிந்து விட்டது. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். சினிமாவில் என்னோடு எப்போதும் இருப்பவர்கள் மீனவ நண்பர்கள். மீனவர் பிரச்சனைக்காக ராமே‌ஸ்வரத்திலும், டெல்லியிலும் போராட்டம் நடத்தினேன். ராமேசுவரத்துக்கும், இலங்கைக்கும் இருப்பது சிறிய தூரம்தான். இருநாட்டு மீனவர்களும் எந்த பகுதியிலும் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். மீனவர்களால்தான் கடலுக்குள் வேறுயாரும் நுழைந்தாலும் அடையாளம் காட்டமுடியும்.

அடித்தால்தான் மாங்காய் விழும் என்பதுபோல மீனவர்கள் பிரச்சனையில் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறேன். நிச்சயமாக தீர்வு சொல்வேன். உங்களுக்காக போராடுவேன். எனது போராட்டத்துக்கு நீங்கள் கைகொடுக்க வேண்டும். மீனவர்கள் வேதனையை அரசுக்கு புரியவைப்பேன் எ‌ன்று விஜயகாந்த் பேசினார்.

Leave a Reply