ஈழத் தமிழரைக் காப்பாற்ற தவறிவிட்டார் கருணாநிதி – விஜயகாந்த்
இலங்கைத் தமிழர்களைமுதல்வர் கருணாநிதி காப்பாற்றத் தவறிவிட்டார் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் கோமதி ஆ.கணேசனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜய காந்த் நேற்று முன்தினம் மாலை 4.45 மணிக்கு ஆறுமுகநேரிக்கு வந்தார். அங்கு அவருக்கு தேர்தல் பொறுப்பாளர் ஆஸ்டின் தலைமையில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு திரண்டு இருந்த தொண்டர்களிடையே திறந்த வானில் நின்றபடி விஜய காந்த் பேசினார்:
இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
இந்த தொகுதியில் ஏன் தேர்தல் வந்தது என்பதை சிந்திக்க வேண்டும். இந்த தேர்தலில் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள். அப்போது தான் ஆளும் கட்சியினருக்கு பயம் ஏற்படும். உங்களுக்கு நல்ல ஆட்சி வரவேண்டும். தே.மு.தி.க. 21ஆவது கட்சி என்றார்கள். அப்படி சொன்னவர்களை இன்று காணவில்லை.
தற்போது களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. மட்டுமே உள்ளது. தைரியம் இருந்தால் அவர்களும் வந்து நிற்கலாம். என்றார்.