என் தைரியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது – விஜயகாந்த்
வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் இரண்டு நாட்களாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சாலவேடு கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், கீழ்கொங்காலூர், மருதாடு, வந்தவாசி, இளங்காடு, நடுகுப்பம், நல்லூர், மாவலவாடி, தெய்யார், தெள்ளார் ஆகிய கிராமங்களில் வேனில் நின்றபடியே தே.மு.தி.க.வேட்பாளர் ஜனார்த்தனனுக்காக முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
நான் தவறுகளை சுட்டிக்காட்டியதால் கல்யாண மண்டபம், தோட்டத்தை இடிப்பதுடன், வருமான வரி துறையினரை என் மீது ஏவுகின்றனர். என்னை சோதிக்காதீர்கள், சோதித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும். நீங்கள் எதைவேண்டுமாலும் விலை கொடுத்து வாங்கலாம். விஜயகாந்தின் தைரியத்தை விலை கொடுத்து வாங்க முடியாது.
எனக்கு எல்லாவேலையும் தெரியும். தே.மு.தி.க தொண்டர்களை சாதாரணமாக நினைக்க வேண்டாம். என் கட்சி மக்கள் சக்தி உள்ள கட்சி என்று பேசினார்.