பண‌ம் கொடு‌ப்பதுதா‌ன் ‌திரும‌ங்கல‌ம் பா‌ர்முலா: விஜ​ய​காந்த்

”வாக்​கா​ளர்​களை ஒரு புறத்​தில் பய​மு​றுத்​து​வ​தும்,​​ மறு​பு​றத்​தில் பணம்,​​ பிரி​யாணி என்று ஆசை காட்​டு​வ​தும்தா‌ன் திரு​மங்​க​லம் பார்முலா” எ‌ன்று தே.மு.தி.க.​ தலை​வர் விஜ​ய​காந்த் கூறி​யுள்​ளார்.​

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ஜன​நா​ய​கத்​தில் வேண்​டா​த​வர்​களை நீக்​க​வும்,​​ வேண்டியவர்களை ஆட்​சிக்​குக் கொண்டு வர​வும் வகை​செய்​வதே தேர்​தல்.​ ஆனால் தேர்​தல்​கள் நியா​ய​மா​க​வும்,​​ சுதந்தி​ர​மா​க​வும் நடை​பெற வேண்​டும்.​ இதற்​குத் தேர்​தல் ஆணை​யம்​தான் நேரடி பொறுப்பு என்​றா​லும்,​​ நிர்​வாக ரீதியில் மாநில அர​சு​தான் இதற்கு உத்​த​ர​வா​தம் அளிக்க வேண்​டும்.​ ஆனால் தமிழ்​நாட்​டில் நடை​பெற உள்ள திருச்செந்தூர்,​​ வந்​த​வாசி இடைத்தேர்​தல்​க​ளில் இவை நிறை​வே​றுமா?​

மேலை நாடு​க​ளில் இடைத் தேர்​தல்​க​ளின்​போது அமைச்​சர்​கள் பிர​சா​ரத்​தில் ஈடு​ப​டு​வ​தில்லை.​ ஆனால் இங்கு ஆட்சி செய்​யும் கோட்​டையே காலி​யா​கி ​வி​டு​கி​றது.​ அமைச்​சர்​கள் தொகு​தி​க​ளில் முகா​மி​டு​கின்​ற​பொ​ழுது அதி​கா​ரி​கள் புடை​சூழ வரு​வ​தும்,​​ ஆணை​கள் பிறப்​பிப்​ப​தும்,​​ அப்​பட்​ட​மான அதி​கார துஷ்​பி​ர​யோ​கம் ஆகும்.​

காவல்​துறை உத​வி​யோடு எதிர்க்​கட்​சி​க​ளின் மீது வன்​முறை கட்​ட​விழ்த்​து​வி​டப்​ப​டு​கி​றது.​ ஒரு ஓட்​டப்​பந்​த​யம் போல பல அர​சி​யல் கட்​சி​க​ளுக்​கி​டையே ஆரோக்​கி​ய​மாக நடை​பெ​ற​வேண்​டிய அர​சி​யல் போட்டி,​​ சமூக விரோ​தி​க​ளைக் கொண்ட போர்க்​க​ள​மா​கவே ஆக்​கப்​பட்​டு​விட்​டது.​ வாக்​கா​ளர்​களை ஒரு புறத்​தில் பய​மு​றுத்​து​வ​தும்,​​ மறு​பு​றத்​தில் பணம்,​​ பிரி​யாணி என்று ஆசை காட்​டு​வ​தும் வாடிக்​கை​யா​கி​விட்​டது.​ இதையே திரு​மங்​க​லம் பார்​முலா என்று கொண்டா​டு​கின்​ற​னர்.​ அது ஜன​நா​ய​கத்​துக்கு வெட்​டப்​பட்​டுள்ள மர​ணப் படு​குழி என்று நல்​ல​வர்​கள் வேதனைப்படுகின்ற​னர்.​

மீனவ வாக்​கா​ளர்​க​ளைக் கவ​ர​வேண்​டும் என்​ப​தற்​காக தமி​ழக முதல்​வர் கரு​ணா​நிதி கேட்​டுக் கொண்​ட​தின் பேரில் மத்திய அரசு மீன்​பி​டித் தொழில் ஒழுங்​கு​முறை சட்ட மசோ​தவை தாற்​கா​லி​க​மாக நிறுத்தி வைத்​துள்​ளது.​ அது மீண்​டும் கொண்​டு​வ​ரப்​ப​ட​மாட்​டாது என்ற உறுதி எது​வு​மில்லை.​ ஆகவே மீன​வர்​கள் இதை நம்ப வேண்​டாம் என்று கேட்​டுக்​கொள்​கி​றேன்.​ வாக்​க​ளர்​க​ளுக்​குச் சிறி​த​ளவு பணம் கொடுத்து வெற்​றி​பெற்று பத​விக்கு வந்​த​பின் பெரு​ம​ள​வுக்கு ஊழல் செய்​கின்​ற​னர்.​ மக்​க​ளின் வரிப்​ப​ணம் இத​னால் முக்​கால் பங்கு கொள்ளை போகி​றது.​

தமிழ்​நாட்​டில் கடந்த 20 ஆண்​டு​க​ளில் ஆட்​சி​களை மாற்றி,​​ மாற்றி பார்த்​தும் கூட ஏழ்​மையை ஒழிக்க முடி​ய​வில்லை.​ மக்​க​ளுக்​காக பாடு​ப​டக்​கூ​டிய நல்​ல​வர்​கள் என்​றைய தினம் தேர்​தல்​க​ளில் ஈடு​பட்டு வெற்​றி​பெ​று​கி​றார்​களோ அன்​றைய தினம்​தான் மக்​க​ளுக்கு விடி​வு​கா​லம் ஏற்​ப​டும்.​

தேர்த​லில் செல​வ​ழிக்​கப்​ப​டும் பணம் அவர்​க​ளது உழைப்​பில் வந்​த​தல்ல.​ மக்​கள் வரிப்​ப​ணத்​தில் பத​விக்கு வந்​த​வர்​கள் மன​சாட்​சியை விற்று கொள்​ளை​ய​டித்​த​து​தான்.​ ஆகவே கடந்த ஆட்​சிக் காலங்​க​ளில் போட்டி போட்​டுக் கொண்டு ஊழலில் திளைத்​த​வர்​கள்,​​ இப்​போது போட்டி போட்​டுக் கொண்டு மக்​க​ளுக்​குப் பணம் கொடுக்​கி​றார்​கள்.​ எனவே பணம் வாங்​கிய மக்​கள் மன​சாட்​சிப்​படி அவர்​க​ளுக்​குத்​தான் ஓட்​டுப் போட​வேண்​டு​மென்ற அவ​சி​ய​மில்லை.​​ நீதி​யின் பக்​கம் மக்​கள் திரண்டு எழுந்து நிற்​பார்​கள் என்று விஜ​ய​காந்​த் கூறி​யுள்​ளார்.

Leave a Reply