மாநாட்டில் விஜயகாந்த்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரசார வேனில் அனைத்துக் கிராமங்களுக்கும் செல்வேன் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டார்.
தம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் பேசிய அவர், தாம் இந்த மாநாட்டிற்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பிரசார வேனில் வந்துள்ளதாக் கூறினார்.
1994-ம் ஆண்டு அந்த வேளை முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் எனக்கு வழங்கினார். ஆனால் அதைப் யன்படுத்தவில்லை. தற்போது இந்த மாநாட்டுக்கு அந்த வேனில் வந்துள்ளேன்.
வேனின் பதிவு எண் 2005, நான் பயன்படுத்தத் தொடங்கிய ஆண்டு 2005. எம்.ஜி. ஆருக்குப் பின் அவரது வேனைப் பயன்படுத்தும் வாய்ப்பை இறைவன் எனக்கு ஏறபடுத்திக் கடுத்துள்ளார். எம.ஜி.ஆரும் காமராஜரும் எனது வழிகாட்டிகள்.
வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்தப் பிரசார வாகனத்தில் அனைத்து கிராமங்களுச் செல்வேன் என்றார் விஜயகாந்த்.
மக்கள் நலனுக்காக எனது வீட்டை விற்று இந்த அரசியல் மாநாட்டை நடத்துகிறேன் என் தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
மதுரை தோப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற கட்சியின் முதல் மாநாட்டில் அவர் பேசியதாவது:
எடுத்த சபதம் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இளம் வயதிலிருந்தே உண்டு. பணக்காரக் குடுப்பத்தில் நான் பிறந்தாலும் பழகியது எல்லாம் ஏழை எளியவர்களுடன்தான்..
திரைப்படத்துறையில் இறங்கிய பின் எண்ணற்ற சோதனைகளை சந்தித்தபோதிலும் எனது கொள்கைகளை நான் விட்டுக்கொடுக்கவில்லை. சமுதாயச் சீர்திருத்தச் சிந்தனை உள்ள படங்களில் மட்டுமே நடித்தேன். அதுவும் தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்தேன்.
நடிப்புத்துறை மூலம் கிடைத்த பணத்தில் பெரும் பகுதியை சேவைப் பணிக்கு ஒதுக்கி வந்தேன். குறிப்பாக எனது பிறந்த நாள் விழாக்களை ஏழைகளுக்கும் நலிவடைந்த மாணவர்களுக்கும் உதவி செய்யும் விழாவாகக் கடைப்பிடித்தேன்.
குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் தேசிய பேரழிவு ஏற்பட்டபோது பல லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினேன். அதைக்கூட சில கட்சியினர் கேலி செய்தனர். எங்கள் ரசிகர்கள் செய்யும் பொது சேவைகள் கூட விமர்சிக்கப்பட்டது.
காவல்துறையினர் அரசியல் கட்சியினரை மதிக்கின்றனர். ஆனால் சேவை செய்யும் ரசிகர்களை உதாசீனப்படுத்துகின்றனர். அரசியல் கட்சியினரோ மக்கள் நலனில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில்தான் அரசியல் கட்சியத் தொடங்க நேரிட்டது.
அரசியல் கட்சியைத் தொடங்கியதால் மிரட்டல் வருமே என்று கூறுகிறார்கள். வரட்டும். வருமான வரித்துறை மூலம்தானே மிரட்டல் வரும். நான் வீட்டை விற்று மாநாட்டை நடத்துகிறேன். என்னிடம் ஒளிவுமறைவு ஏதுமில்லை.
எனது மனைவி பிரேமலதா, எனது செயலுக்கு ஊக்கமளித்து வருகிறார். அதற்காக அவருக்கோ, எனது உறவினர்களுக்கோ கட்சிப்பொறுப்புகள் வழங்கப்போவதில்லை. ரசிகர்களாக இருந்து தற்போது கட்சித் தொண்டர்களாக மாறியுள்ள நீங்கள்தான் எனக்கு அனைத்தும் என்றார் விஜயகாந்த்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது பற்றி விஜயகாந்த் பேட்டியளித்தார்.
மதுரையில் வரும் 14-ம் தேதியன்று தனது அரசியல் கட்சியைத் துவக்கிய நடிகர் விஜயகாந்த், சென்னையில் தனது ‘சுதேசி’ படப்பிடிப்பின்போது அளித்த பேட்டி விபரம்:
அரசியலுக்கு வந்த பிறகு நடிகர் சங்கத்தின் தலைவர் பதவியை வகிப்பீர்களா?
நடிகர் சங்கத்துக்கு அடுத்த தேர்தல் வரும்போது பார்ப்போம். தேர்தல் வரும் சமயம் நான் அரசியலில் முழு மூச்சுடன் இறங்கி, அதனால் சங்கப் பணிகளை சரிவர செய்ய இயலாமல் போகும்போது நிச்சயம் நானே ராஜினாமா செய்துவிடுவேன்.
வேறு ஏதேனும் அரசியல் கட்சி சார்பில் உங்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்களா?
நான் உறுதியாக சொல்கிறேன். இதுவரை யாரும் வரவில்லை. அப்படி வரும்போது நானே உங்களிடம் சொல்கிறேன்
April 15th, 2009 at 1:30 am
dear captain namma katchiyai valarkka theevirama piracharam seyya vendum ella nadigaroda rasigaraiyum parthu vote ketkka vendum kurippa rajini rasigaridam vote ketkka vendum rajini rasigargal rajini mel ulla veruppil kandippa namakku adharavu koduppargal indha therthalil namma power ennanu nama nirupikkanum naan dubaiyil irukkiren enakku dmdk uruppinar card vendum atharkku naan enna seyya vendum please reply captain your unmaiyana thondan A.ANSARI P O BOX 29114 ,DUBAI, UAE
May 9th, 2009 at 7:15 pm
Dear captain,
nan nama katchiyin vetikaha frnz kita elam pracharam panuven.Enaku katchiyoda niranthira membership card venum.