விளம்பரங்கள்


செய்திகள்:

சட்டசபை இடைத்தேர்தல்: விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்

சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தலில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வரும் 12ம் தேதி முதல் 4 நாட்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

டிசம்பர் 19ம் தேதி திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தே.மு.தி.க வேட்பாளர்களை ஆதரித்து திருச்செந்தூர் தொகுதியில் 12ம் தேதியும், 15ம் தேதி வந்தவாசியிலும் தனது அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.

ஆறுமுகநேரி, காயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், திருச்செந்தூர், நாலுமுனைக்கிணறு, காயாமொழி, பூச்சிக்காடு, வள்ளிவிளை, சோனங்காட்டுவிளை, குரும்பூர் (பஜார்), சேதுக்குவாய்த்தான், வடக்கு ஆத்தூர், புன்னக்காயல், தெற்கு ஆத்தூர் ஆகிய ஊர்களில் 12 மற்றும் 13ம் தேதி விஜயகாந்த் பிரசாரம் செய்கிறார்.

வந்தவாசி தொகுதியில் 15, 16ம் தேதிகளில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். தே.மு.தி.க வெளியிட்ட செய்தி்க்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்​சமே விபத்​து​க​ளுக்கு கார​ணம்: விஜ​ய​காந்த்

சென்னை: லஞ்​சம் வாங்​கிக் கொண்டு போக்​கு​வ​ரத்து விதி​மு​றைகளை அமல்படுத்தாமல், கண்​டு​கொள்​ளா​மல் இருப்​ப​து​தான் விபத்​து​க​ளுக்கு கார​ணம் என்று தேமு​திக தலை​வர் விஜ​ய​காந்த் குற்​றம் ​சாட்​டி​யுள்​ளார்.
விரிவு…

ஊனமு‌ற்றோரு‌க்கு சலுகை‌யி‌ல்லை: த‌மிழக அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று

மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்த ஊனமு‌ற்றவ‌ர்க‌ளி‌ல் 80 பே‌ரி‌‌ல் நா‌ன்கு பேரு‌‌க்கு‌ம், உதவி கேட்டு வி‌ண்‌ண‌ப்‌பி‌த்த மனவ‌ள‌ர்‌ச்‌சி கு‌‌ன்‌றிய‌வர்க‌ளி‌ல் 4 ஆ‌யிர‌ம் பே‌‌‌ரி‌ல் 2 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு‌த்தா‌ன் ‌உத‌வி‌த்தொகை கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.
விரிவு…

தேமுதிக வேட்பாளர்கள்: திருச்செந்தூர்-கோமதி கணேசன், வந்தவாசி-ஜனார்தனன்

சென்னை: வரும் இடைத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் தேமுதிக சார்பில் கோமதி ஆ.கணேசனும், வந்தவாசியில் என்.ஜனார்தனனும் போட்டியிடுகின்றனர்.

இதற்கான அறிவிப்பை தேமுதிக தலைவர் விஜய்காந்த் இன்று வெளியிட்டார்.

மீனவர்களுக்கு எதிரான சட்ட‌த்தை உடனடியாக வாப‌ஸ் பெறா‌வி‌ட்டா‌ல் போரா‌ட்ட‌ம்: விஜயகாந்த்

”மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ள தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த், அவ்வாறு வாபஸ் பெறாவிட்டால் தமிழகம் முழுவதும் மீனவர்களுடன் இணைந்து மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
விரிவு…

நீலகிரி சேதத்துக்கு லஞ்ச-ஊழலே காரணம்-விஜயகாந்த்

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளுக்கு மேல் இடிந்துள்ளன, மக்கள் உண்ண உணவின்றி கையில் பணமும் இன்றி அத்தியாவசியப் பொருட்களை கூட வாங்க முடியாத நிலையில் திண்டாடி வருகின்றனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

‘வரும் முன் காத்துக் கொண்ட ராசா’: விஜய்காந்த்

சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனக்கு மட்டும் ‘வரும் முன் காப்போம் திட்டத்தை’ செயல்படுத்திய அமைச்சர் ராசா, மழை-வெள்ளம் விஷயத்தில் தன்னைத் தேர்ந்தெடுத்த நீலகிரி மக்களுக்கு மட்டும் ‘வரும் முன் காப்போம் திட்டத்தை’ செயல்படுத்தியிருந்தால் பெரும் சேதத்தை தவிர்த்திருக்க முடியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…

தினையளவு நன்மை..பனையளவு கொள்ளை- விஜயகாந்த்

சென்னை: கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் நிறுவனங்களும், புரோக்கர்களும் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க வழி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
விரிவு…

‘ஸ்டார் ஹெல்த்துக்கு ரூ. 540 கோடி- கருணாநிதி குடும்பத்துக்கு பங்கு உண்டா?’

சென்னை: ஏழை மக்களுக்கான கலைஞர் இலவச மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமலாக்கும் பொறுப்பை தனியார் காப்பீட்டு நிறுவனமான ஸ்டார் ஹெல்த் நிறுவனத்துக்கு வழங்கி, அவர்களுக்கு ரூ.540 கோடி தரப்பட்டதி்ல் கருணாநிதியின் குடும்பத்துக்கு பங்கு உண்டா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
விரிவு…

ராஜபக்சே தப்பிக்க திட்டம்: உதவிய தமிழக குழு-விஜய்காந்த்

சென்னை: தமிழக எம்.பிக்கள் குழுவை இலங்கைக்கு அழைத்ததன் மூலம் மனிதகுல படுகொலையாளி என்ற குற்றச்சாட்டில் இருந்து தப்ப ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
விரிவு…