விளம்பரங்கள்


செய்திகள்:

எம்.ஜி.ஆர். விசுவாசிகள் வாக்கு எனக்கே-விஜயகாந்த்

மதுரை: நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். எனது கட்சிக்கு எம்.ஜி.ஆர். விசுவாசிகளின் வாக்குகள் கிடைக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்த தேமுதிக செயல் வீரர்கள் கூட்டத்தில் தனது கட்சியின் கம்பம் (அருண்குமார்), ஸ்ரீவைகுண்டம் (சவுந்தரபாண்டியன்), இளையாங்குடி (பாலகிருஷ்ணன்) வேட்பாளர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தினார்.
விரிவு…

மதுரையில்போலீசா­ரு­க்­கு விஜயகாந்த் அறிவுரை

மதுரை:”போலீசார் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்’ என மதுரையில் தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட அதன் தலைவர் விஜயகாந்த் பேசினார்.மதுரையில் நேற்று இரண்டாவது நாளாக சிம்மக்கல், அய்யர் பங்களா, மேலூர், வண்டியூரில் தே.மு.தி.க., விஜயகாந்த் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: விரிவு…

சரித்திரம் படைக்கவே கூட்டணியை புறக்கணித்தேன் : விஜயகாந்த் பிரசாரம்

மதுரை : தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மதுரையில் இரண்டாவது நாளாக பிரசாரம் செய்தார். மதுரை சிம்மக்கல், ஐயர் பங்களா , மேலூர், வண்டியூர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார்.
விரிவு…

காரைக்குடி, திருச்சிக்கு புதியரயில் பாதை: தே.மு.தி.க.,

மதுரை :‘மதுரையில் இருந்து மேலூர் வழியாக காரைக் குடி, திருச்சிக்கு புதிய ரயில் பாதை அமைக்க முயற்சிப் பேன்’ என தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு பேசினார். மதுரையில் கோவில் பாப்பாகுடி, கூடல்நகர், சொக்கலிங்கநகர், ரயிலார்நகர், சாந்திநகர், பாண்டியன்நகர், கரிசல்குளம், சொக்கநாதபுரம், விளாங்குடி, பரவை மில் காலனியில் தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். விரிவு…

‘தமிழ்நாடு வங்கி’ துவங்கி கடன்கள் தருவேன் : மதுரையில் விஜயகாந்த் உறுதி

மதுரை : ‘எனது கட்சியை வெற்றி பெறச் செய்தால் தமிழ்நாடு வங்கி துவங்கி, கடன் தருவேன்’ என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.மதுரையில் தே.மு.தி.க., வேட் பாளர் கவியரசுவை ஆதரித்து முனிச் சாலை பகுதியில் திறந்த வேனில் இருந்தபடி அவர் பேசியதாவது: தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள் நாட்டை குழி தோண்டி புதைத்துள்ளன. அரிசி ஒரு ரூபாய், ஹலோ (போன்) ஒரு ரூபாய் என்கின்றனர்.
விரிவு…

வேட்பாளரிடம் தொகுதி நிலவரங்களை அறியும் விஜயகாந்த் : வேட்பாளருடன் ஒரு நாள்

தமிழகத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மதுரை தொகுதியில் தி.மு.க., சார்பில் தென் மண்டல தி.மு.க., அமைப்பு செயலாளர் மு.க.அழகிரி, அ.தி.மு.க., சார்பில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பி.மோகனை எதிர்த்து தே.மு.தி.க., சார்பில் நிறுத்தப்பட்டுள்ளவர் கா.கவியரசு. இரண்டு பெரிய கூட்டணி கட்சிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கவியரசை முன்னிறுத்தி விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா பிரசாரம் செய்தனர். தினமும் காலை முதல் இரவு வரை கட்சியினருடன் இணைந்து கவியரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
விரிவு…

தே.மு.தி.க., வேட்பாளருக்கு மிரட்டல்

மதுரை : தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியுள்ளதாவது: ஏப்., 26ம் தேதி தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய எனக்கு இரவு மொபைல் போனில் அழைப்பு வந்தது. அதில் பேசியவர்கள், வேட்பு மனுவை நாளை (நேற்று) மதியம் 3 மணிக்குள் வாபஸ் பெறா விட்டால் உயிருடன் இருக்க மாட்டீர்கள்’ என மிரட்டினர். விரிவு…

தே.மு.தி.க. மதுரை வேட்பாளர் மாற்றம்

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

இத்தொகுதியில் முன்னர் முத்துலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவருக்குப் பதிலாக கவியரசு என்பவர் மதுரை நாடாளுமன்ற விரிவு…

தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம்

மதுரை தெற்கு மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் பயணியர் விடுதி யில் நடைபெற்றது. திருமங்கலம் நகர் செயலாளர் தங்கம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பாஸ்கர், அவைத்தலைவர் கணபதி முன்னிலை வகித்தனர். மே 4 ல் கட்சியின் அலுவலகம் டில்லியில் திறக்கப்படும் போது நிர்வாகிகள் கலந்து கொள்வது உட்பட பல விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டது.
விரிவு…

விஜயகாந்தும், நானும் தனித்துதான் போட்டியிடுவோம் – சரத்குமார்

தேமுதிக தலைவர் விஜயகாந்தும், நானும் கூட்டணி அமைக்கப் போவதில்லை. இருவரும் தனித்து தான் தேர்தல்களில் போட்டியிடுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
விரிவு…