அதிமுகவினரே தேமுதிகவுக்கே ஓட்டுப் போடுங்கள் – பிரேமலதா
கோவை: அதிமுகவினர் தேர்தலைப் புறக்கணிக்காமல் தேமுதிவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
விரிவு…
Sunday 09 Aug 2009 | கோயம்பத்தூர்
|
கோவை: அதிமுகவினர் தேர்தலைப் புறக்கணிக்காமல் தேமுதிவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா கூறியுள்ளார்.
விரிவு…
Sunday 09 Aug 2009 | கோயம்பத்தூர்
தூத்துக்குடி : திருச்சியை தாண்டி ஓரிடத்தில் அழகிரியை எதிர்த்து நான் போட்டியிட தயார். ஆனால், தி.மு.க.,வின் கையில் ஆட்சி அதிகாரம் இல்லாமல், கூட்டணியில்லாமல், வாக்காளர்களுக்கு பணம் தராமல் அங்கு அழகிரி என்னை எதிர்த்து போட்டியிடத் தயாரா?” என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் எதிர் சவால் விடுத்தார்.
விரிவு…
Saturday 08 Aug 2009 | மற்றவை
ஸ்ரீவைகுண்டம்: தேமுதிகவுடன் யாரும் நேரடியாக மோத முடியாது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தேமுதிக வேட்பாளராக சவுந்திரபாண்டியன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டார்.
விரிவு…
Saturday 08 Aug 2009 | புதுக்கோட்டை
தேமுதிகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியை பூலோக வைகுண்டமாக மாற்றுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சவுந்திர பாண்டியனை ஆதரித்து விஜயகாந்த் இன்று 2வது நாள் பிரசாரம் மேற்கொண்டார். ஏரலில் நடந்த பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்கு உள்ள குளங்களை தூர்வாரினாலே இந்த பகுதி செழிப்பானதாக மாறும். ஆனால் அந்த பணியை அரசு செய்யவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குளங்கள் தூர்வாரப்படும். இதனால் விவசாயம் வளர்ச்சி பெறும்.
விரிவு…
Saturday 08 Aug 2009 | புதுக்கோட்டை
ஆர்.எஸ்.மங்கலம் : “எனக்கென தனி சேனல் இருந்தால் தான் கருணாநிதிக்கு உடனடி பதில் தரமுடியும்’ என, இளையான்குடி தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார் . இளையான்குடி தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணனை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியத்தில் அவர் பேசியதாவது: எனது சிறுவயதில் நெல் கொள்முதலுக்காக எனது அப்பாவுடன் இப்பகுதிக்கு வந்துள்ளேன். அன்றிருந்த பசுமை இன்று வறட்சியாக மாறியுள்ளது.
விரிவு…
Friday 07 Aug 2009 | புதுக்கோட்டை
இளையாங்குடி: வாக்காளர்களே காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள். அப்படி காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் திரும்பத் திரும்ப கஷ்டத்தைத்தான் அனுபவிக்க நேரிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
விரிவு…
Thursday 06 Aug 2009 | சிவகங்கை
மதுரை: நான் எம்.ஜி.ஆரின் ரசிகன். எனது கட்சிக்கு எம்.ஜி.ஆர். விசுவாசிகளின் வாக்குகள் கிடைக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் இன்று நடந்த தேமுதிக செயல் வீரர்கள் கூட்டத்தில் தனது கட்சியின் கம்பம் (அருண்குமார்), ஸ்ரீவைகுண்டம் (சவுந்தரபாண்டியன்), இளையாங்குடி (பாலகிருஷ்ணன்) வேட்பாளர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தினார்.
விரிவு…
Monday 03 Aug 2009 | மதுரை
கோவை: சுயநலவாதியாக இருக்கிறார் ஜெயலலிதா. சுயநலத்தின் காரணமாகவே அவர் தேர்தலை புறக்கணித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவியான மெஹபூபா எப்படி செயல்படுகிறார்?. அவரைப் போல ஜெயலலிதாவும், அதிமுகவும் சட்டசபையில் செயல்பட வேண்டாமா? என்று விளாசியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
விரிவு…
Sunday 02 Aug 2009 | கோயம்பத்தூர்
சென்னை: “பெட்ரோல் விலை உயர்வால் பஸ் கட்டணம் உயர வாய்ப்பு உண்டு’ என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோலியப் பொருட்களின் விலை மத்திய அரசைப் பொறுத்தவரை உலகச் சந்தையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதில்லை. அரசியல் நிலவரத்திற்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகிறது. தேர்தல் முடிந்து விட்ட நிலையில், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை போல் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளன.
விரிவு…
Thursday 02 Jul 2009 | சென்னை
விருத்தாசலம்:விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் எம்.எல்.ஏ., இரண்டாவது நாளாக கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வான தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த இரண்டு நாட்களாக தொகுதியில் கிராமம், கிராமமாகச் சென்று பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். நேற்று முன்தினம் கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த பகுதிகளிலும், நேற்று விருத்தாசலம் ஒன்றியம் எறுமனூர், தொட்டிக்குப்பம், ராசாபாளையம், பட்டி, பரூர், கோணாங்குப்பம் உள்ளிட்ட 14 கிராமங்களிலும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, மனுக்களைப் பெற்றார்.
விரிவு…
Tuesday 30 Jun 2009 | விருத்தாச்சலம்