விளம்பரங்கள்


செய்திகள்:

‘இலங்கை.. 2 நாளில் உண்மை நிலவரம் தெரியும்’

வேலூர்: இலங்கையில் உள்ள உண்மையான நிலவரம் என்ன என்பது இரண்டு நாளில் தெரியும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் செளகத் ஷெரீப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து அவர் பேசுகையில்,
விரிவு…

மின் வெட்டுக்கு காரணம் ஜெயலலிதா ஆட்சிதான்:

மின் வெட்டு ஏற்படக் காரணம் ஜெயலலிதா ஆட்சிதான் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

வேலூர் மக்களவை தொகுதி, தேமுதிக வேட்பாளர் சவுகத்ஷெரிப்பை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். ஒடுகத்தூர், அணைக்கட்டு, வேலூர் விரிவு…

‘தனி ஈழம்’ குறித்து இதுவரை குரல் கொடுக்காதது ஏன்? ஜெயல்லிதாவிற்கு விஜயகாந்த் கேள்வி

‘இலங்கை பிரச்சினை தீர தனி ஈழம் தான் ஒரேவழி என்று சொல்லும் ஜெயலலிதா இதுவரை குரல் கொடுக்காமல் இப்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன்? என்று வேலூர் பகுதியில் பிரசாரம் செய்த விஜயகாந்த் கேள்வி விடுத்தார். விரிவு…

தே.மு.தி.க. வெற்றி பெற்றால் குடியாத்தம் பகுதியில் கைத்தறி ஏற்றுமதி மையம்; பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

வேலூர் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சவுகத் ஷெரீப்பை ஆதரித்து விஜயகாந்த் மனைவி பிரேமலதா நேற்று வேலூர் குடியாத்தம் பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இலங்கையில் ஒரு இனமே அழிகிறது. அவர்களை காக்க இனி மத்திய மாநில அரசுகளிடம் பேசி பயனில்லை. தெய்வத்திடம் முறையிடுவது ஒன்றே வழி. விரிவு…

தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்

வேலூர் மாவட்டம் திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிலவும் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு இன்று தேமுதிகவினர் சுமார் 1 மணி நேரம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
விரிவு…

வேலூரில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளை கண்டித்து திமிரி பேரூராட்சியில் வரும் 5-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக வேலூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், தேமுதிக மாநில துணை செயலாளருமான ஏ.ஆர். இளங்கோவன் கூறியுள்ளார்.
விரிவு…

விஜயகாந்த் பரபரப்பு பேட்டி

தேர்தல் வழக்கு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆற்காடு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவரது வருகையை முன்னிட்டு நீதிமன்ற வாசலில் குவிந்திருந்த ஏராளமான தொண்டர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். தன் மீது போடப்பட்டிருக்கும் இந்த வழக்கு அரசின் பழிவாங்கும் செயல் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறார்.
விரிவு…

தே.மு.தி.க., மகளிர் அணி ஆலோசனை கூட்டம்

வேலூரில் மத்திய மாவட்ட தே.மு.தி.க., மகளிர் அணி ஆலேசனைக் கூட்டம் நடந்தது.மகளிர் அணி மாவட்ட செயலாளர் மஞ்சுளா கணேஷ் தலைமை வகித்தார். பிரேமா வரவேற்றார். செல்வி முன்னிலை வகித்தார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் சிவகாமி, வேலூர் மாவட்ட செயலாளர் வேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விரிவு…

தேமுதிக ஆலோசனை கூட்டம்

தேமுதிக மாநில இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் தலைமையில் வேலூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
விரிவு…