விளம்பரங்கள்


செய்திகள்:

தே.மு.தி.க., வேட்பாளருக்கு அருந்ததியர் மக்கள் இயக்கம் ஆதரவு

விருதுநகர் : அருந்ததியர் மக்கள் இயக்கம் மாநிலத் தலைவர் வடமலை சுந்தரராஜனின் செய்திக் குறிப்பு:விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் அருந்ததியர் சமுதாய மக்களின் சமூக,பொருளாதார உயர்வுக்கு தொடர்ந்து உழைத்து வருகிறார். விரிவு…

தே.மு.தி.க.,வுக்கு பிரசாரம் செய்யவிமானத்தில் வந்த 100 மாணவர்கள்

விருதுநகர் :விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய புனேயைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 100 பேர் வந்துள்ளனர்.விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளராக பாண்டியராஜன் போட்டியிடுகிறார்.
விரிவு…

50 மதிமுகவினர், தேமுதிகவில் இணைந்தனர்!

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் க.பாண்டியராஜன் முன்னிலையில் 50 ம.தி.மு.க.வினர் தே.மு.தி.க.வில் இனணந்தனர். இது குறித்த விபரம் வருமாறு:
விரிவு…

விருதுநகரில் சுறுசுறுப்பான ம.தி.மு.க., தே.மு.தி.க * களையிழந்த காங்., கார்த்திக் கட்சிகள்

விருதுநகர்,: விருதுநகர் லோக்சபா தொகுதியில் ம.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும் சுறுசுறுப்பான பிரச்சாரத்தில் இருக்க, காங்., மற்றும் கார்த்திக் கட்சிகளோ பின் தங்கியுள்ளன.விருதுநகர் லோக்சபா தொகுதியில் பிரதான கட்சி வேட்பாளர்களான ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, காங் வேட்பாளர் மாணிக்கதாகூர், தே.மு.தி.க.,வில் பாண்டியராஜன், பா.ஜ., சார்பில் நடிகர் கார்த்திக் போட்டியிடுகின்றனர். விரிவு…

விருதுநகரில் பிரேமலதா பிரசாரம்

விருதுநகர் : விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜனை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில்,’விருதுநகரில் நல்ல ரோடு, குடிநீர், பள்ளி, கல்லூரி வசதிகள் இல்லை. இது எப்படி வளர்ச்சி பெற்ற தொகுதியாக இருக்கும். நீங்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தால், விருதுநகரை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம். இங்கு ரயில்வே மேம்பாலம் அமைப்போம். ஒரு ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி சாப்பிட தரமற்றதாக உள்ளது. விரிவு…

விருதுநகர் தொகுதிக்கு தனி தேர்தல் அறிக்கை தே.மு.தி.க. வேட்பாளர் பாண்டியராஜன் அதிரடி

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் பாண்டியராஜன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவர் விருதுநகர் மேம் பாட்டுக்காக என்னென்ன திட்டங்கள், வசதிகள் செய்து கொடுக்கலாம் என ஆராய்ந்து அதற்கான தேர்தல் அறிக்கையை தீவிரமாக தயாரித்து வருகிறார். விரிவு…