1978 ஆம் ஆண்டு இயக்குனர் திரு. M.A. அவர்கள் “இனிக்கும் இளமை” என்ற திரைப்படத்தில் புரட்சி கலைஞரை “கெஸ்ட் ரோலில்” முதன் முதலில் நடிக்க வைத்தார். திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புரட்சி கலைஞர் 1978-ம் ஆண்டு சென்னைக்கு வந்தார். சென்னையில் தி. நகரில் உள்ள ரோகினி லாட்ஜில் தான் ஆரம்பகாலத்தில் தங்கினார். வாய்ப்புகள் கானல் நீராய் கண்ணில் தெரிய பசிக்கு பச்சை தண்ணியே பஞ்சாமிர்தமானது.

திரைப்படத்துறையில் தாம் வளரும்போதே தனது நண்பர்களான இப்ராஹிம் ராவுத்தர், ராமு வசந்தன், சௌந்தர்ராஜன், ரவீந்தரன, ராதா, சுந்தராவ், சம்பத், நாகராஜன் போன்றவர்களை தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர மன்ற பொறுப்புக்களை வளர்த்துக் கொள்பவர்களாக வளர்த்துவிட்டார். ஆரம்பத்திலிருந்தே ரசிகர் மன்ற பொதுச்செயலாளராக திரு. ராமுவசந்தன் அவர்கள் இருந்து வருகிறார். புரட்சி கலைஞர் அவர்களுக்கு 1978 ஆம் ஆண்டு தென் இந்திய தலைமை ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. 1980-ஆம் ஆண்டு அகில இந்திய தலைமை ரசிகர்மன்றமாக மாற்றப்பட்டது. பிறகு

1982 ஆம் ஆண்டு “தமிழ்நாடு விஜயகாந்த் தலமை ரசிகர் மன்றம்” பெயர் மாற்றம் செய்யப்பட்டது.