விஜயகாந்த் நகர்
மார்ச் 13, 2005 அன்று ஈரோடு மாவட்டத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவில், சத்தியமங்கலம் ஆகிய ஊர்களில் தலா 150 வீடுகள் கொண்ட புதிய நகரை விஜயகாந்த் ரசிகர் மன்றத்தினர் உருவாக்கி உள்ளனர். இதற்குப் “புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நகர்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த நகரில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை ஈரோட்டில் நடந்த விழாவில் விஜயகாந்த் வழங்கினார்.