நிவாரண வழிகள்
புரட்சி கலைஞர் அவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக பல வருடங்களாக உணவு வழங்கி வருகிறார். தனது பிறந்தநாள் அன்று ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு உணவளிக்கிறார். வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள் தொழில் தொடங்கவும் சலவைபெட்டியும், பண உதவியும், ஊனமுற்றோருக்கு இலவச கண்ணாடியும், மூன்று சக்கர சைக்கிளும் வழங்கி வருகிறார். பெண்களுக்கு இலவச தையல் மிஷினும் வழங்கி வருகிறார். தமிழ்நாடு அளவில் பனிரெண்டாம் வகுப்பில் தமிழ்பாட பிரிவில் முதல் மூன்று இடத்தில் வரும் மாணவ மாணவிகளுக்கு ரூ.5,000/- பரிசளிக்கிறார். ஏழை குழந்தைகளுக்கு புத்தகம், சீருடை, வாங்க ஆண்டுதோறும் 25 இலட்சம் வழங்குகிறார்.
MGR ஊமை மற்றும் காதுகேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ. 50,000/- வழங்குகிறார். லிட்டில் பிளவர் பள்ளிக்கு ஆண்டுதோறும் ரூ.25,000/- வழங்குகிறார். அதோடு மட்டுமல்லாது. ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி தொடங்கி அதையும் சிறப்பாக நடத்தி வருகிறார்.
1998-ல் ஈரோட்டில் தொடங்கி இலவச மருத்துவமனை நடத்தி வந்தார். பின் அதை விரிவுபடுத்தப்பட்டதாக சென்னைக்கு மாற்றி அன்றும் இலவச சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2005 ஆம் ஆண்டின் கணக்குப்படி புரட்சி கலைஞருக்கு உள்ள ரசிகர் மன்றங்களின் எண்ணிக்கை 45,000 ஆகும். இது மட்டும் அல்லாது இலங்கை, கனடா, லண்டன் மற்றும் பல்வேறு நாடுகளில் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. இந்தியாவில் தமிழநாடு தவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் ரசிகர் மன்றங்கள் உண்டு.